Antara barangan dirampas Majlis Perbandaran Klang dalam operasi gempur premis perniagaan di Jalan Klang Sentral kelmarin.
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சட்டவிரோதமாக வீட்டில் வியாபாரம்- அந்நிய நாட்டினர் மீது எம்.பி.கே. நடவடிக்கை

கிள்ளான், செப் 7– ஜாலான் காப்பார், சுங்கை பினாங் தாமான் இண்டாவிலுள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக வர்த்தம் புரிந்து வந்த அந்நிய நாட்டினர் மீது  கிள்ளான் நகராண்மைக் கழகம் அமலாக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அந்த மியன்மார் பிரஜைகள் லைசென்ஸ் இன்றி அந்த வீட்டில் மளிகைக் கடையை நடத்தி வந்தது விசாணையில் கண்டறியப்பட்டதாக கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் அமலாக்கப் பிரிவு துணை இயக்குநர் ஷாருள் ஹஸ்ரி அப்துல் மஜிட் கூறினார்.

கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் 2007 ஆம் ஆண்டு தொழிலியல் மற்றும் வர்த்தக லைசென்ஸ துணைச் சட்டத்தின் 3 வது பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட கடையிலுள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் அந்நியா நாட்டினரை முறியடிப்பதற்காக இத்தகைய நடவடிக்கைகளை தாங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்தார்.

தங்கள் இருப்பிடத்தில் வாடகைக்கு இருக்கும் அந்நிய நாட்டினரின் நடவடிக்கை குறித்து அதன் உரிமையாளர்கள் எப்போதும் மிகுந்த கவனப்போக்குடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஆகஸ்டு மாதம் முதல் 305 வர்த்தக மையங்கள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறிய அவர், இச்சோதனை நடவடிக்கைகளின் போது லைசென்ஸ் இன்றி வர்த்தகம் புரிந்த குற்றத்திற்காக 86 பேருக்கு குற்றப்பதிவு வெளியிட்டப்பட்டதாக சொன்னார்.


Pengarang :