ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சபாக் பெர்ணமில் 70 விழுக்காட்டு வயல்களில் பூச்சித் தொல்லை கட்டுப்படுத்தப்பட்டது

சபாக் பெர்ணம், செப் 10- இங்குள்ள 6,632.4 ஹெக்டர் வயல்களில் சுமார் 70 விழுக்காட்டு பகுதியில் பூச்சித் தொல்லை பிரச்னை கட்டுப்படுத்தப்பட்டது.

நெற் பயிர்களின் தண்டுகளில் ஊடுருவும் புழுக்கள் மற்றும் இலைகளைச் சுருங்கச் செய்யும் புழுக்களை ஒழிப்பதற்காக பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும் நடவடிக்கை சுமார் பத்து லட்சம் வெள்ளி செலவில் மேற்கொள்ளப்பட்டதாக நவீன விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

பூச்சித் தொல்லையிருந்து  ஓரளவு நிலைமையை கட்டுப்படுத்தி விட்டோம். பல இடங்கள் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கினாலும் சில இடங்கள் அப்பாதிப்பிலிருந்து தாக்குப்பிடித்துள்ளன. எனினும், இப்பிரச்னை காரணமாக நெல் உற்பத்தி கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

ஒவ்வொரு பருவ காலத்தின் போதும் இத்தகைய பூச்சித் தொல்லை ஏற்படுவது இயல்பு எனக் கூறிய அவர், இருப்பினும் இம்முறை ஏற்பட்ட பாதிப்பு மிகக் கடுமையானது என்றார்.

பாரிட் 15, சிம்பாங் லீமாவிலுள்ள வாவாசான் தானி கூட்டுறவுக் கழகத்திற்கு வருகை மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இத்தகைய பூச்சித் தொல்லை பிரச்னை ஏற்படுவதை எதிர் கொள்வதற்கு தமது தரப்பு தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் சொன்னார்..

 


Pengarang :