Mohd Zawawi Ahmad Mughni (depan, kiri) bersama peserta projek Laman Hijau Strata 2.0 di Pangsapuri Sri Ayu, Bandar Putera pada 19 September 2020. FOTO MAJLIS PERBANDARAN KLANG
ECONOMYMEDIA STATEMENTPBT

மூவின மக்களுக்கும் உணவுப் பொருள்களை பகிர்ந்தளித்தது சுங்கை காண்டீஸ் தொகுதி

ஷா ஆலம், செப் 17- மலேசிய மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் 60 சமையல் பொருள் பொட்டலங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மூன்று இனங்களுக்கும் சமமாக பகிர்ந்தளித்தது சுங்கை காண்டீஸ் தொகுதி.

 மலேசிய தினத்தை முன்னிட்டு சுங்கை காண்டீஸ் தொகுதி ஏற்பாடு செய்த கம்போங் ஜோஹான் செத்தியா, தாமான் தெலுக் மெனேகுன், தாமான் ஸ்ரீ அண்டாலாஸ் பகுதிகளுக்கான பயண நிகழ்வின் போது மலாய்,சீன மற்றும் இந்தியர்களுக்கு இந்த உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜவாவி முக்னி கூறினார்.

மலேசிய தினத்தை முன்னிட்டு மூன்று இனங்களின் ஒற்றுமையின் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த உதவிப் பொருள்களை வழங்கினோம் என்றார் அவர்.

இந்த உதவி பொது மக்களின் சுமையை குறைக்க ஓரளவு உதவும் என்பதோடு ஒற்றுமையும் சுபிட்சமும் நிறைந்த சமுதாயத்தின் உருவாக்கத்திற்கு துணை புரியும் என்று  மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

Pengarang :