ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் நேற்று வரை 83.7 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், செப் 27- நாட்டில் நேற்று வரை 1 கோடியே 96 லட்சத்து 4 ஆயிரத்து 699 பேர் அல்லது 83.7 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். இந்த தகவலை “கோவிட்நாவ்“ எனும் அகப்பக்கம் வாயிலாக சகாதார அமைச்சு பகிர்ந்து கொண்டுள்ளது.

மொத்தம் 2 கோடியே 19 லட்சத்து 44 ஆயிரத்து 808 பேர் அதாவது 93.7 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக அது கூறியது.

நேற்று வரை 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 28,982 பேர் அல்லது 0.9 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

இவ்விரு தரப்பையும் சேர்ந்த 269,465 பேருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 117,269 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 152,269 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி, பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இது வரை 4 கோடியே 14 லட்சத்து 57 ஆயிரத்து 628 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.


Pengarang :