ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

கெமென்சா ஹைட்ஸ்  மண் சரிவுக்கு நிலத்தடி நீரோட்டம் காரணம்

கோலாலம்பூர், செ 18-  இங்குள்ள செமென்சா ஹைட்ஸ் குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட மண் சரிவுக்கு கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலத்தடி நீரோட்டம் காரணமாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

நிலத்தடி நீரோட்டம் காரணமாக நேற்றிரவு 9.30 மணியளவில் மண் கீழ் நோக்கி தள்ளப்பட்டு  மலைச்சாரலிலிருந்து வரும் நீர் தொடர்ந்து செல்ல முடியாத சூழலை ஏற்படுத்தியதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்குநர் வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களை அருகிலுள் சமூக மண்டபத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை தாங்கள் செய்து வருவதாக அவர் சொன்னார்.

மலைச்சாரல் பகுதியை பலப்படுத்தும் பணியை சம்பந்தப்பட்டத்  தரப்பினருடன் இணைந்து தாங்கள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று இரவு ஏற்பட்ட இந்த மண் சரிவில் 19 இரட்டை மாடி வரிசை வீடுகள் பாதிக்கப்பட்டன. அவ்வீடுகளின் பின்புறப் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் அந்த வீடுகளில் வசிக்கும் 28 பேர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறினர்.


Pengarang :