Dato’ Seri Amirudin Shari meluangkan masa bersarapan pagi bersama pimpinan setempat di Restoran B Is, Kuala Langat pada 25 Julai 2020. Turut hadir dari sebelah kanan Dato’ Menteri Besar adalah Ahli Parlimen Kuala Langat Dr Xavier Jayakumar, Adun Morib Hasnul Baharuddin, Yang Dipertua Kuala Langat, Dato’ Amirul Azizan Abd Rahim dan Adn Kota Anggerik Najwan Halimi. Foto ASRI SAPFIE/SELANGORKINI
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டும் உணவகங்களில் அனுமதி

ஷா ஆலம், அக் 1- உணவகங்களில் அமர்ந்து உணவருந்த விரும்புவோர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை தொடர்ந்து நிலை நிறுத்தப்படுகிறது.

தேசிய மீட்சித் திட்டத்தின் அனைத்து கட்டத்திலும் உள்ள மாநிலங்களில் இந்த நடைமுறை அமலில் இருப்பதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

மேம்படுத்தப்படாத விதிமுறைகளை தேசிய பாதுகாப்பு மன்றம் வெளியிட்டதால் இவ்விவகாரம் தொடர்பில் குழப்பம் ஏற்பட்டதாக அவர் சொன்னார்.

கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் மலாக்கா, பெர்லிஸ், பகாங், திரங்கானு, சரவா ஆகிய மாநிலங்கள் இன்று தொடங்கி தேசிய மீட்சித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு மாறுகின்றன.

அதே சமயம்  நெகிரி செம்பிலான் மற்றும் லபுவான் நான்காம் கட்டத்திற்கு மாற்றம் காண்கின்றன.

 


Pengarang :