Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari bercakap kepada media selepas meninjau program Outreach Vaksinasi Covid-19 Taman Desawan, Klang di Pusat Kebudayaan Soka Gakkai Malaysia cawangan Selangor pada 18 Julai 2021. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

பூப்பந்து விளையாட்டாளர் கிஷோனாவுக்கு எதிராக இனவாத விமர்சனம்- மந்திரி புசார் கண்டனம்

ஷா ஆலம், அக் 4- நாட்டின் பூப்பந்து விளையாட்டாளர் எஸ்.கிஷோனாவை இனரீதியாக சிறுமைப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மலேசியர்களை ஒன்றுபடுத்தும் களமாக விளையாட்டுத் துறை விளங்குவதோடு அனைவரும் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும் என்று  என்று அவர் வலியுறுத்தினார்.

2021 ஆம் ஆண்டு சுடிர்மான் கிண்ணப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மலேசிய பூப்பந்து அணிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம், தேசிய விளையாட்டாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இன ரீதியான விமர்சனத்தை நான் கடுமையாக கண்டிக்கிறேன் என்றார் அவர்.

பின்லாந்தில் நேற்று நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு சுடிர்மான் கிண்ண பூப்பந்துப் போட்டியில் பங்கேற்ற போது ஆடவர் ஒருவர் இனவாத ரீதியில் கிஷோனாவை விமர்சனம் செய்தார்.

அப்போட்டில் மலேசியா 1-3 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பானிடம் தோல்வி கண்டு இறுதிச் சுற்றுக்கு செல்லும் தகுதியை இழந்தது.

 


Pengarang :