ECONOMYPBTPENDIDIKANSELANGOR

நீர்க் கசிவைத் தடுக்க 500 கிலோமீட்டர் தொலைவுக்கு குழாய்கள் மாற்றப்பட்டன

ஷா ஆலம், அக் 5- நீர் கசிவு பிரச்னையை களையும் விதமாக  500 கிலோமீட்டர் நீளத்திற்கு பழுதடைந்த பழைய குழாய்களை மாற்றும் பணி 50 கோடி வெள்ளி செலவில் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுக்கு 150 கிலோமீட்டர்  என்ற அளவில் குழாய்களை தரம் உயர்த்தும் பணி மேற்கொள்ளப்பட்டதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

பழைய குழாய்களுக்கு சிமெண்ட் எஸ்பெஸ்டோஸ் வகை குழாய்களை பொருத்தும் பணி மேற்கொள்ளப்படுவதாக கூறிய அவர், மாநிலம் முழுவதும் 40 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இத்தகைய குழாய்கள் 6,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு பொருத்தப்பட்டுள்ளன என்றார்.

ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு குழாய்களை மாற்றுவதற்கு உண்டாகும் செலவு பத்து லட்சம் வெள்ளியாகும் என்றார் அவர்.

இங்குள்ள கம்போங் லொம்போங் சாலையை நான்கு தடங்கள் கொண்ட சாலையாக விரிவு படுத்தும் பணியை ஆய்வு செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

குழாய் மாற்றும் பணியில் வெறும் குழாய்கள் மட்டும் சம்பந்தப்படவில்லை. மாறாக, குழாய்களுடன் தொடர்புடைய இதர உபகரணங்களும் மாற்றப்பட வேண்டியுள்ளது என்று அவர் விளக்கினார்.

குழாய் உடைப்பு போன்ற காரணங்களால் நீர் வீண் விரயமாவதை தவிர்க்கும் நோக்கில் குழாய்களை மாற்றும் பணி மேற்கெள்ளப்படுவதாகவும் அவர் சொன்னார்.

 


Pengarang :