ECONOMYHEALTHPBTWANITA & KEBAJIKAN

பத்தாங் காலி தொகுதி ஏற்பாட்டில் 4,000 உணவுக் கூடைகள் விநியோகம்

ஷா ஆலம், அக் 8- கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பத்தாங் காலி தொகுதி சார்பில் சுமார் 4,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதம் நடமாட்டக் கட்டப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டது முதல்  இந்த உதவி தொடர்ச்சியாக பொது மக்களுக்கு  வழங்கப்பட்டு வருவதாக  தொகுதி ஒருங்கிணைப்பாளர் சைபுடின ஷாபி முகமது கூறினார்.

இது தவிர பத்தாங் காலி கேர் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் திட்டத்தையும் தாங்கள் மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.

மருத்துவர்களைச் சந்திப்பதற்கு ஏற்கனவே முன்பதிவு பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதியை நாங்கள் ஏற்படுத்தி தருகிறோம் என்றார் அவர்.

நேற்று, பத்தாங் காலி தொகுதி நிலையில் நடைபெற்ற  சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் நடமாடும் தடுப்பூசி இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பத்தாங் காலி தொகுதியைச் சேர்ந்த சுமார் 3,800 பேர் தடுபபூசியைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


Pengarang :