ECONOMYHEALTHNATIONALPBT

பாரம்பரிய பகுதியாக கோல குபு பாரு பிரகடனப்படுத்தப்படும்

கிள்ளான், அக் 10- நாட்டின் பாரம்பரிய பகுதியாக கோல குபு பாரு பிரகடனப்படுத்தப்படும்.  இதன் வழி மாநிலத்தின் புதிய சுற்றுலா மையமாக அது உருவாகும்.

கோல குபு பாருவை பாரம்பரிய நகராக பதிவு செய்தற்கான நடவடிக்கையில் நகர மற்றும் கிராம மேம்பாட்டு இலாகா ஈடுபட்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நாட்டில் முறையாக திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட நகரம் என்ற முறையில் இந்த அந்தஸ்தைப் பெறுவதற்கு தேவையான தகுதி மற்றும் தோற்றத்தை கோல குபு பாரு கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பாரம்பரியத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதோடு அதனை நாட்டிலுள்ள இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தவும் வேண்டும் என்று அவர் சொன்னார்.

கோல குபு பாரு நகருக்கான சிறப்புத் திட்டங்களை மாநில அரசு வகுக்கவுள்ளதாக கூறிய அவர், அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

இந்த நகரை பாரம்பரிய நகராக பதிவு செய்யும் பணிகள் முற்றுப் பெறுவதற்கு ஓராண்டு காலம் பிடிக்கும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 


Pengarang :