ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிறு வியாபாரிகளுக்கு சிலாங்கூர் அரசு வழங்கும் பெரிய உதவி இது என வர்த்தகர்கள் மகிழ்ச்சி

காஜாங் 11அக் ;- இந்திய சமூகத்தை பொருளாதார ரீதியில் உயர்த்துவதை நோக்கமாக கொண்ட ஐ- சீட் எனப்படும் சிலாங்கூர் இந்தியர் தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகா 20 லட்சம் வெள்ளி செலவில் கடந்த ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்டது.

கோவிட் 19 நோய்த்தொற்று தாக்கத்தால் செயலிழந்த ஒன்றாக தோன்றிய இத்துறை, நாடு மீட்சியை நோக்கி நகரும் இவ்வேளையில், இந்திய சிறு வியாபாரிகள் மற்றும் தொழில் நடத்துநர்களும் பொருளாதார மீட்சி பெற உதவும் வண்ணம் சில உதவிப் பொருட்களை காஜாங் வட்டாரத்தில் நேற்று வழங்கியுள்ளது.

சிலாங்கூர் மாநில சமூக பொருளாதார மேம்பாடு, சமூக நலன், தொழிலாளர் ஆற்றல் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் சார்பில் அவரின் அதிகாரிகள், ஒரு கோழி வியாபாரிக்கு, கோழி இறகுகளை அகற்றும் மின்சார சாதனம் மற்றும்  இரண்டு மகளிருக்கு  தையல் இயந்திரம், துணிகளின் ஓரம் தைக்கும் இயந்திரம், ஸ்திரிக்கா பெட்டிகள் மற்றும் ஆடை சரிபார்க்கும் அறை ஆகியவற்றை ஒப்படைத்தனர்.

இதற்கு, மாநில  அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட காஜாங் செமினி வட்டாரத்தைச் சார்ந்த திரு. ஆர்.கிருஷ்ணசாமி ராமசாமி,  இந்த இயந்திரம் தனது நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்துவதுடன் தனது வணிக உற்பத்தி ஆற்றலை அதிகரிக்கும் என கூறினார்.

இதற்கு முன்பு இந்த வேலையை செய்ய தான் வாங்கும் கோழிகளை மற்றவர்களிடம் கொடுத்து பதப்படுத்துவார், அதற்காக அவர் ஒவ்வொரு கோழிக்கும் பணம் கொடுக்க வேண்டும்.

அதனால், ஐ சீட் மூலம் இந்த உதவிக்கு நாடியதாகவும் இது சரியான நேரத்தில் தனக்கு வழங்கப்பட்டதற்கு ஏற்பாட்டாளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

சிலாங்கூர் இந்திய சமூகத்திற்கான i-SEED பிரிவின் முக்கிய நோக்கம் சிறு வணிகர்களின் வருமானத்தை அதிகரிக்க உதவுவதாகும், சில மாதங்களுக்கு முன்பு இந்த உதவிகளுக்கு விண்ணப்பித்த இவர்களுக்கு உடனே உதவ முடியவில்லை என்ற வருத்தம் தனக்கு உள்ளதாகவும், நாட்டில் இருந்து வந்த நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாக சற்று கால தாமதம் ஆகி விட்டாலும் மக்களுக்கு உதவ முடிந்தமைக்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர் அந்த குழுவினர்.


Pengarang :