ORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மனநல விழிப்புணர்வுக்கு சிலாங்கூர் முன்னுரிமை- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், அக் 11- மன நல ஆரோக்கியத்திற்கு முக்கியத்தும் அளித்து வரும் சிலாங்கூர் மாநில அரசு, இந்நோக்கத்தின் அடிப்படையில் சேஹாட் எனப்படும் சிலாங்கூர் மனநல ஆரோக்கியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மன நல பாதிப்புக்கு உள்ளான சிலாங்கூர் மக்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசு அமல்படுத்தியுள்ள திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  கூறினார்.

இந்த திட்டம் சிலாங்கூர் அரசின் செலங்கா செயலியில் உள்ளடக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்த சமூகத்தை உருவாக்குவதற்கு ஏதுவாக மன நலப் பிரச்னைகளைக் கையாள்வது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

மனநலம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு தேவையான பங்களிப்பை  வழங்கும் பொறுப்பு நாம்  ஒவ்வொருவருக்கும் உள்ளது. நம்மைச் சுற்றியுள்ளவர்களின் நாம் தீவிரமாக கவனிப்பதன் மூலம் உரிய உதவிகளை வழங்க இயலும் என்றார் அவர்.

நேற்று அனுசரிக்கப்பட்ட அனைத்துலக மனநல ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் 1,080 தற்கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து கடந்தாண்டு முதல் இந்த மன நல ஆரோக்கியத் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தி வருவதாக அவர் சென்னார்.

பெருந்தொற்று பரவலைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் மன நலப் பிரச்னையை கையாள்வதற்காக சிலாங்கூர் மாநில அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 500,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்தது.

 


Pengarang :