ECONOMYHEALTHNATIONALPBT

தாமான் டெம்ப்ளர் தொகுதி ஏற்பாட்டில் 1,040 பேருக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள்

ஷா ஆலாம், அக் 11- தாமான் டெம்ப்ளர் தொகுதியில் உள்ள 1,040 மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.

மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 வெள்ளிக்கான பற்றுச் சீட்டுகளைக் கொண்டு அவர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று  தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சான் கூறினார்.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பிறந்தவர்களுக்கு இம்முறை இந்த பற்றுச்சீட்டு வழங்கப்படுகிறது. இந்த பற்றுச் சீட்டைப் பெற்றவர்கள் இன்று தொடங்கி வரும் 17 ஆம் தேதி வரை செலாயாங், என்.எஸ்.கே. பாசார் ராயாவில பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த பற்றுச்சீட்டுகள் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை தாமான் டெம்ப்ளர் தொகுதி சேவை மையத்தில் வழங்கப்பட்டு வருவதாகவும அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பை எதிர் நோக்கியுள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பொருளாரச் சுமையைக் குறைப்பதில் இந்த பற்றுச்சீட்டுகள் ஓரளவு துணை புரியும் என அவர் கூறினார்.

ஜோம் ஷோப்பிங் திட்டத்தின் வாயிலாக ஒவ்வோராண்டும் 100 வெள்ளி வழங்கும் வகையில் மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு 2,500 வெள்ளி வழங்க வகை செய்யும் மரண சகாய நிதி திட்டம் கடந்தாண்டு மே மாதம் நிறுத்தப்பட்டது.

 


Pengarang :