ECONOMYMEDIA STATEMENTSELANGOR

பி.பி.என். நான்காம் கட்டத்திற்கு மாறினாலும் எஸ்.ஒ.பி. விதிகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்- மந்திரி புசார்

கோம்பாக், அக் 18- தேசிய மீட்சித் திட்டத்தின் நான்காம் கட்டத்திற்கு சிலாங்கூர் இன்று தொடங்கி மாறினாலும் பொதுமக்கள் தொடர்ந்து கட்டொழுங்குடன் இருக்க வேண்டும் என்பதோடு எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.

நம்மில் சிலர் எஸ்.ஒ.பி. விதிகளை தொடர்ந்து மீறும் பட்சத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று  சம்பவங்கள் மீண்டும் உயர்வதற்கான சாத்தியம் உள்ளதாக அவர் சொன்னார்.

நமது கட்டொழுங்கில் “விரிசல்“ ஏற்படும் நிலை உண்டானால் நோய்த் தொற்று மறுபடியும் பெருகி மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழியும் நிலை ஏற்படும் என்றார் அவர்.

நாடு பெண்டமிக் எனப்படும் பெருந்தொற்று நிலையிலிருந்து எண்டமிக் எனப்படும் சிறுதொற்று நிலைக்கு மாறும்போது  நாமும் முந்தைய சுதந்திரமான வாழ்க்கையை மறந்து எஸ்.ஒ.பி. விதிகளைக் கடைபிடிப்பதில் கட்டொழுங்குடன் இருக்க வேண்டும் என்றார் அவர்.

நேற்று கோம்பாக், பூர்வக்குடியினர் குடியிருப்பு பகுதிக்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளைக் கழுவுவது, கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது போன்ற புதிய இயல்புக்கு நாம் நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 


Pengarang :