ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பண்டோரா பேப்பர்ஸ்: எஸ்.பி.ஆர்.எம். விசாரணையை இரட்டிப்பாக்க வேண்டும்-

 பக்கத்தான் ஷா ஆலம், அக் 23-  செல்வாக்கு பெற்ற நபர்கள் அயல் நாடுகளில் சேமிப்பு கணக்கை வைத்துள்ளதாக கூறும் பண்டோரா பேப்பர்ஸ் விவகாரத்தை விசாரிக்கும் முயற்சியை எஸ்.பி.ஆர்.எம் எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையம் இரட்டிப்பாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்தப் பணம் சட்டப்பூர்வமான முறையில் பெறப்பட்டதா? அல்லது சட்டவிரோதமாகப் பெறப்பட்டதா? என்பதை கண்டறிய இந்த விசாரணை அவசியம் என்று பக்கத்தான் ஹராப்பான் கூறியது. எனினும்,  இவ்விவகாரத்தில் முக்கிய ஆவணங்களை பெறும் ஆற்றலை அந்த ஆணையம் கொண்டிராததோடு  விசாரணை நடத்துவதற்கான விஷேச ஆற்றலையும் வளங்களையும் கொண்டிராத எதிர்க்கட்சித் தலைவரிடம் ஆவணங்களை கேட்பது ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்று அது தெரிவித்தது.

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பில்  பண்டோரா  பேப்பர்ஸ் அம்பலப்படுத்திய விவகாரம் தொடர்பில் விவாதிப்பதற்கு  எதிர்க் கட்சித் தலைவர் டந்தோஸ்ரீ  அன்வார்  இப்ராஹிம்  கடந்த 4 ஆம் தேதி கொண்டு வந்த தீர்மானத்தை  நாடாளுமன்றம் தள்ளுபடி செய்தது.


Pengarang :