ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மேரட்டோரியம் சலுகைக்கு இன்னும் விண்ணப்பிக்கலாம்

கோலாலம்பூர், அக் 27- வங்கிகளில் கடன் பெற்றவர்கள் அந்த கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கான மோரட்டோரியம் சலுகைக்கு விண்ணப்பம் செய்ய இன்னும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

பெமுலே எனப்படும் மக்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மீட்சி தொகுப்பின் கீழ் இந்த மோரட்டோரியம் சலுகையை வழங்க வங்கிகள் இன்னமும் தயாராக உள்ளதாக துணை நிதியமைச்சர் முகமது சஹார் அப்துல்லா கூறினார்.

ஆகவே, இந்த சலுகையைப் பெற விரும்புவோர் உடனடியாக வங்கியுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த பொருளாதார மீட்சித் தொகுப்புக் காலக்கட்டம் முடிந்தப் பின்னரும் கடனைத் திரும்பச் செலுத்துவதில் உதவியை எதிர்பார்க்கும் இதர கடனாளிகள் வங்கிகளுடன் தொடர்பு கொள்ளலாம். கடன் பெற்றவர்கள் வசதிக்கேற்ப மாதாந்திரத் தவணைப் பணத்தை குறைப்பது உள்ளிட்ட உதவிகளை அவை வழங்கத் தயாராக உள்ளன என்றார் அவர்.

மக்களவையில் இன்று  ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் அப்துல் சமாட் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்  அவர் இவ்வாறு கூறினார்.

தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மோரடோரியம் சலுகையை அரசாங்கம் நீடிப்பதற்கான சாத்தியம் மற்றும் வட்டியில்லா மோரட்டோரியம் சலுகைத் திட்டத்தை அறிமுகப்படுத்துவற்கான வாய்ப்பு குறித்து காலிட் கேள்வியெழுப்பியிருந்தார்.

 


Pengarang :