ECONOMYMEDIA STATEMENT

துபாய் காட்சியில் பசுமை நகரத் திட்டம் தாக்கல்: சிப்பாங் நகராண்மைக் கழகம் தகவல்

 சைபர்ஜெயா, அக் 31-  அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் துபாய்   2020 கண்காட்சியில் பசுமை நகரத் திட்டத்தை (நகர்ப்புற இயற்கைத் திட்டம்) சிப்பாங் நகராண்மைக் கழகம் முன்வைக்கும். சிப்பாங்கில் கார்பன் குறைப்பு உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டங்களை பகிர்ந்து கொள்வதற்காக சுறூறச்சூழல் துறை அமைச்சு சிப்பாங் நகராண்மைக் கழகத்தை இந்த கண்காட்சிக்கு தேர்ந்தெடுத்துள்ளதாக அதன் தலைவர் டத்தோ அப்துல் ஹமிட் ஹூசேன் கூறினார்.

சிப்பாங்கில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள முதலீட்டாளர்களை ஈர்க்க விரும்புகிறோம். இவ்வட்டாரத்தில் இன்னும் குறிப்பாக சைபர்ஜெயாவில் அபிவிருத்தி செய்ய இடமுள்ளது என்றார் அவர். பொருத்தமான முதலீட்டாளர்களை நாங்கள் வரவேற்கத் தயாராக உளாளோம்.

அத்தகைய முதலீட்டாளர்களை மேம்பாட்டாளர்களிடம் அறிமுகப்படுத்தி வைப்போம் என அவர் மேலும் சொன்னார். ஊராட்சி மன்ற திட்டத்தின்படி சிப்பாங் மாவட்டத்திற்கு உயர் தொழில்நுட்ப தொழில்துறைகளும் அதிக அளவிலான மனித ஆற்றலும் தேவைப் படுவதாக அவர் குறிப்பிட்டார். எனினும், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள் தேவை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :