ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்திற்கு வெ. 50 லட்சம் நிதி- சிலாங்கூர் அரசு வழங்கும்

செர்டாங், நவ 2- ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மலேசிய புத்ரா பல்கலைக் கழகத்திற்கு(யு.பி.எம்.) எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம்  50 லட்சம் வெள்ளி அறநிதியை வழங்கும்.

மலேசிய மற்றும் அனைத்துலக நிலையில் பொருளாதாரம் மற்றும் நிர்வாகம் தொடர்பான ஆய்வுகளுக்காக அந்த நிதி வழங்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இதற்கான தனித் துறை உருவாக்கப்பட்டவுடன் அந்த ஆய்வுகள் உடனடியாக பயன்படுத்தப்படும் என்பதோடு வழிகாட்டியாகவும் கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

அதே சமயத்தில் யு.பி.எம். தனது ஆராய்ச்சி நடவடிக்கைகளை விரிவுபடுத்த முடியும். இதன் வழி இந்த பல்கலைக்கழகம் மலேசியாவில் மட்டுமின்றி அனைத்துலக நிலையிலும் தரமிக்க உயர்கல்விக் கூடமாக உயர்வு காண்பதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்.

ஆராய்சி மேபாட்டுத் துறை உருவாக்கம் தொடர்பில் யு.பி.எம். மற்றும் எம்.பி.ஐ. இடையே நடைபெற்ற கையெழுத்திடும் சடங்கை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :