ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBTSELANGOR

கடல் பெருக்கு அபாயம்- மோரிப், கிளானாங் கடற்கரைக்கு செல்வதை தவிர்ப்பீர்

ஷா ஆலம், நவ 3- பொழுது போக்கு மற்றும் சுற்றுலா நோக்கங்களுக்காக மோரிப்  மற்றும் கிளானாங் கடற்கரைக்குச் செல்வதை தவிர்க்கும்படி பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். 

நாளை தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கோல லங்காட் மாவட்டத்தின் கடரோரப் பகுதிகளில் ஏற்படக்கூடிய கடல் பெருக்கை கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு பொழுதுதை கழிக்க இவ்விரு கடற்கரைகளுக்கும் வருகை புரிய திட்டமிட்டவர்கள் அத்திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமாய் மோரிப் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் பகாருடின் கேட்டுக் கொண்டார்.

கடல் கொந்தளிப்பும் அடைமழையும் ஒரே நேரத்தில் ஏற்படும் பட்சத்தில் கடல் நீர் கரையைக் கடந்து குடியிருப்பு பகுதிகளில் நுழையும் வாய்ப்பு உள்ளது என்று அவர் சொன்னார்.

இதனிடையே, இந்த இயற்கை சீற்றம் காரணமாக சிகிஞ்சான் கடலோரத்தில் உள்ள ஐந்து கிராமங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக சிகிஞ்சான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் சுயி லிம் கூறினார்.

இப்பகுதி மக்கள் தங்களின் முக்கிய ஆவணங்களையும் விலையுயர்ந்த உபகரணங்களையும் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.

கடல் பெருக்கு தொடர்பான ஆகக்கடைசி நிலவரங்களை அவர்கள் தொடர்ந்து செவிமடுத்து வர வேண்டும் என்பதோடு அவசியம் ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றாலகவும் தயாராக இருக்க வேண்டும் என்றார் அவர்.


Pengarang :