Yang Dipertua Pertubuhan Kebajikan dan Amal Wanita Selangor (Pekawanis) Datin Seri Masdiana Muhammad (tengah) bergambar bersama wakil media dalam Majlis Penyerahan Kit Kesihatan Petugas Hadapan di kediaman rasmi Menteri Besar pada 11 Oktober 2021. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENTSELANGOR

கடும் நோயினால் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு பெக்காவானிஸ் உதவி

ஷா ஆலம், நவ 4– சிலாங்கூர் மகளிர் நல மற்றும் தொண்டூழிய அமைப்பான  பெக்காவானிஸ் கின்ராரா  சட்டமன்ற  தொகுதியில் உள்ள 20 கடும் நோயாளிகளுக்கு மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களை  வழங்கியது.

குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த சிறுநீரக,  இருதய மற்றும் புற்றுநோயாளிகளை இலக்காகக் கொண்டு இந்த உதவி வழங்கப்படுவதாக என்று அதன் சுகாதாரப் பிரிவுத் தலைவர் லிம் பீ எங் கூறினார்.

 நீண்ட காலமாக படுத்த படுக்கையாக இருக்கும்  நோயாளிகள் எதிர்கொள்ளும் துன்பம் மற்றும்  மன அழுத்தத்தைப் போக்குவதற்காக இந்த பங்களிப்பு வழங்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். 

அரசு சாரா அமைப்பாக விளங்கும் பெக்காவானிஸ், சமூகத் தலைவர்களின் ஒத்துழைப்புடன்  சிலாங்கூர் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பின்தங்கியவர்களுக்கு  தொடர்ந்து உதவி புரிந்து வரும் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமது தலைமையிலான பெக்காவானிஸ் அமைப்பு, சட்டமன்ற உறுப்பினர்களுடன்  இணைந்து  30 இந்திய தனித்து வாழும்  தாய்மார்களுக்கு தீபாவளி அன்பளிப்பாக 100 வெள்ளி நிதியுதவி வழங்கியது என்றும் அவர் கூறினார்.

அவர்களில் சிலர் கோவிட் -19 தொற்றுநோயால் தங்கள் கணவர்களை இழந்துள்ளனர். குழந்தைகள் திடீரென்று தந்தையை பறிகொடுத்து நிர்க்கதியாய் இருக்கின்றனர். நிச்சயமாக இது அவர்களுக்கு மகிழ்ச்சிகரமான தீபாவளி அல்ல என்றார் அவர்.

Pengarang :