A computer image created by Nexu Science Communication together with Trinity College in Dublin, shows a model structurally representative of a betacoronavirus which is the type of virus linked to COVID-19, better known as the coronavirus linked to the Wuhan outbreak, shared with Reuters on February 18, 2020. NEXU Science Communication/via REUTERS
HEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 95.7 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர் நவ 4--  நாட்டில் நேற்றிரவு 11.59 மணி நிலவரப்படி  மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 9 ஆயிரத்து 335 பேர்  அல்லது   95.7 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும்,  97.8  விழுக்காட்டினர் அல்லது  2 கோடியே 28 லட்சத்து 91 ஆயிரத்து 80 பேர் குறைந்த பட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இது தவிர, நேற்று பெரியவர்கள் மற்றும் இளையோருக்கு  மொத்தம் 114, 553 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இதன்வழி தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் (பிக்) கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை  5 கோடியே 4 லட்சத்து 20 ஆயிரத்து 916 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான  21 லட்சத்து 97 ஆயிரத்து 961 இளையோர் அல்லது 69.8 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். அதே சமயம் 83.3 சதவீதம் பேர் அல்லது 26 லட்சத்து 22 ஆயிரத்து 306 பேருக்கு    குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே,  மொத்தம் 20,370 ஊக்கத் தடுப்பூசிகள் நேற்று செலுத்தப்பட்டன இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 471,689 ஆக உயர்ந்துள்ளது.

Pengarang :