MEDIA STATEMENTNATIONAL

இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்கள்-மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், நவ 4- சிலாங்கூர் மாநிலத்தில் இந்திய சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும்   சிலாங்கூர் அரசு பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

அவற்றில் சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர் மேம்பாடு மையத்  (சித்தம்) திட்டமும் அடங்கும் என்று  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த மையத்தின் மூலம் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, திறன் மற்றும் உற்பத்தி வழிகாட்டல்,  மற்றும் வணிக உபகரண  மானியங்கள் வழங்கப்படுகின்றன என்று அவர் சொன்னார்.

அக்டோபர் வரை, இந்த திட்டத்தின் மூலம் கடந்த அக்டோபர் வரை 2,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பலன் பெற்றுள்ளனர். சமூகத்துடன் அணுக்கமான உறவை ஏற்படுத்தும் நோக்கில்  இந்திய சமூகத் தலைவர்களின் எண்ணிக்கையை 48ல் இருந்து 62 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 தீபாவளியை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தியில்  அவர் இதனைத் தெரிவித்தார்.

 இந்திய தொழில் முனைவோரை மையமாகக் கொண்டு கடந்த 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட  சித்தம் அமைப்பு வர்த்தக வழிகாட்டி பயிற்சிகள் மற்றும் வர்த்தகத்திற்கான உபகரணங்களை வழங்குகிறது.

இத்திட்டத்திற்கு ஆண்டுதோறும் 10 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.  ஆர்வமுள்ள தொழில் மனைவோர் ஹிஜ்ரா சிலாங்கூர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இது தவிர, வணிக உபகரணங்களை வழங்குவதன் மூலம் இந்தியர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சிலாங்கூர் அரசாங்கம் ஏப்ரல் மாதத்தில் ஐ- சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய சமூக  மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகாவின் அமலாக்கத்திற்காக 17 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

இந்த இனிய தருணத்தில்  இந்து மற்றும் சீக்கிய சமூகத்தினருக்கு குறிப்பாக சிலாங்கூர் மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமிருடின் தெரிவித்தார்.

Pengarang :