ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

79.3 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், நவ 13- நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 79.3 விழுக்காட்டினர் அல்லது 24 லட்சத்து 95 ஆயிரத்து 444 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

இது தவிர, 97.7 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 28 லட்சத்து 54 ஆயிரத்து 725 பெரியவர்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ள வேளையில் 95.2 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 22 லட்சத்து 78 ஆயிரத்து 477 பேருக்கு தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது. 

நேற்று நாடு முழுவதும் 114,704 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி பெற்றவர்களில் 7,388 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 33,258 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் 74,058 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் வழி செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 813 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம், ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 900,201 ஆகும்.


Pengarang :