Dato’ Seri Anwar Ibrahim ketika sidang media khas berkenaan satu pengumuman penting pasca sesi mengadap DYMM Seri Paduka Baginda Yang di-Pertuan Agong di Hotel Le Meridien Kuala Lumpur pada 13 Oktober 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

நோய்த் தொற்று தொடர்ந்து அதிகரித்தால் சரவா தேர்தலை ஒத்தி வைப்பீர்- அன்வார் வலியுறுத்து

ஷா ஆலம், நவ 13- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிக்கும் பட்சத்தில் சரவா மாநில தேர்தல் ஒத்திவைக்கப்படுவதை தாம் வரவேற்பதாக எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

மக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார தொடர்பான அம்சங்களை உள்ளடக்கியுள்ளதால் இவ்விவகாரத்தை தரவுகள் மற்றும் அறிவியல் ரீதியாக ஆராய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மலாக்காவில் செய்த தவற்றை மீண்டும் செய்யாதீர்கள். மாநில ஆளுனர் அம்னோவுக்கு ஆலோசனை வழங்கிய போதிலும் அதனை அந்த கட்சி பொருட்படுத்தவில்லை. எஸ்,ஒ.பி. எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஒழுங்கற்றதாக இருப்பதை இப்போது காண முடிகிறது என்றார் அவர்.

கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு சரவா மாநிலத் தேர்தலை அடுத்தாண்டிற்கு ஒத்தி வைக்கும் படி கோரும் கடிதத்தை தேர்தல் ஆணையத்திற்கு தாம் அனுப்பியுள்ளதாக சரவா மாநில பி.கே.ஆர். உதவித் டாக்டர் மைக்கல்தியோ யூ கெங் முன்னதாக கூறியிருந்தார்.

சரவா மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலம் இம்மாதம் 4 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அடுத்தமாத வாக்கில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :