ECONOMYMEDIA STATEMENTSELANGOR

தேர்வுக்குரிய முதலீட்டு மையமாக சிலாங்கூர் விளங்குவதற்கு பொது முடக்கம் ஒரு தடையல்ல- மந்திரி புசார்

ஷா ஆலம், நவ 17- சுமார் ஐந்து மாதங்களாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் நாட்டின் பொருளாதார மற்றும் முதலீட்டு மையமாக சிலாங்கூர் தொடர்ந்து விளங்கி வருகிறது.

இலக்கவியல் வீயூகம் மற்றும் அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பின் வாயிலாக வியப்பூட்டும் வகையிலான வருமானத்தை மாநில அரசு பதிவு செய்ததே அதற்கு காரணம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இறைவன் அருளால் சிலாங்கூர் வியப்பளிக்கும் வகையில் வருமானத்தை ஈட்டியுள்ளது. இதன் வழி இம்மாநிலம் நாட்டின் முக்கிய முதலீட்டு மையமாகவும் பொருளாதார கிடங்காகவும் விளங்கி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் சிலாங்கூர் மாநிலம் நிர்ணயித்த இலக்குபடி 220 கோடி வெள்ளியை கடந்தாண்டில் வருமானமாகப் பெற்றதாக மந்திரி புசார் கடந்த 8 ஆம் தேதி கூறியிருந்தார்.

கடந்த நவம்பர்  7 ஆம் தேதி வரை 95 விழுக்காட்டு வருமானத்தைப் பெற்றுள்ளதாகவும் ஆண்டு முடிய இன்னும் காலம் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


Pengarang :