ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாடாளுமன்றத்தில் 2022 வரவு செலவுத் திட்டம் கொள்கை ரீதியில் அங்கீகரிக்கப்பட்டது

கோலாலம்பூர், நவ 19- 2022 விநியோகச் சட்ட மசோதா (பட்ஜெட் 2022) நேற்று மக்களவையில் கொள்கை அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டது.

அவையில் நடத்தப்பட்ட குரல் வழி வாக்கெடுப்பில் அதிகமான குரல்கள் ஆதரவை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து அந்த மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டது.

டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டப் பின்னர் முதன் முறையாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தொடர்பான மசோதா இதுவாகும்.

சில உறுப்பினர்கள் எழுந்து உறுப்பினர்களின் வாக்குளை தனித்தனியாக கணக்கிடும் பிளவு வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எனினும், 15 உறுப்பினர்கள் மட்டுமே எழுந்து  நின்றதால் சபாநாயகர் டான்ஸ்ரீ அஸார் அஜிசான் இந்த கோரிக்கையை நிராகரித்தார்.

முன்னதாக, நிதியமைச்சர் டத்தோஸ்ரீ ஸப்ருள் துங்கு அஜிஸ் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றினார். 

மொத்தம் 23,210 கோடி வெள்ளிக்கான 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை துங்கு ஸப்ருள் கடந்த மாதம் 29 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.


Pengarang :