ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

வெ.223 கோடியை உள்ளடக்கிய 67,552 மோசடிகள் தொடர்பில் புகார்

கோலாலம்பூர், நவ 20-  கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு  ஜூன் 20 ஆம் தேதி வரை மொத்தம் 223 கோடி வெள்ளியை உள்ளடக்கிய 67,552 மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பங்குச் சந்தை ஆணையம்  தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒருவர் ஏமாற்றப்படுகிறார் என்பதை இந்த எண்ணிக்கை புலப்படுத்துகிறது என்று அந்த மூலதனச் சந்தையின் முக்கிய ஒழுங்குமுறை அமைப்பு விளக்கியது.

வங்கி அதிகாரிகள், மின்- வணிக அல்லது முதலீட்டுத் துறையினர் போல்  ஆள்மாறாட்டம் செய்வதே இந்த மோசடி கும்பல் கையாளும் தந்திரமாகும் என்று ஆணையம் கூறியது. பொது மக்களை தொடர்பு கொண்டு தங்களை வங்கி அல்லது அமலாக்க அதிகாரிகள் எனக்கூறிக் கொள்ளும் மோசடிப் பேர்வழிகள்,  பணத்தை மாற்ற தனிப்பட்ட தகவல்களைக் கேட்பார்கள்.

அல்லது  விலையுயர்ந்த பொருட்களை மலிவான விலையில் வழங்குவதாகவும் அதற்கு முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறுவார்கள். முதலில் பணம் செலுத்துங்கள் பின்னர் பணத்தை அனுப்புகிறோம் எனக் கூறுவார்கள். ஆனால், பணம் கிடைத்தப் பின்னர்  பொருட்களை அனுப்ப மாட்டர்கள் என்று பங்குச் சந்தை ஆணையம் தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளது.

வங்கி அதிகாரி அல்லது அமலாக்க அதிகாரி என்ற பெயரில் பொது மக்களை தொடர்பு கொண்டு அதிக வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய ஆபத்தில்லாத முதலீட்டுத்திட்டம் உள்ளதாக கூறி ஏமாற்றுவது அக்கும்பல் கடைபிடிக்கும் மற்றொரு தந்திரமாகும் என அது தெரிவித்தது.


Pengarang :