ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிப்ஸ் 2021 மாநாடு- இரு தினங்களில் 9,800 வருகையாளர்களை ஈர்த்தது

கோலாலம்பூர், நவ 20- சிப்ஸ் எனப்படும் சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாடு இரு தினங்களில் 9,800 வருகையாளர்களை ஈர்த்துள்ளது.

இந்த மாநாடு நடைபெறும் நான்கு நாட்களில் 10,000 வருகையாளர்களை ஈர்க்க தாங்கள் திட்டமிட்டிருந்ததாக இன்வெஸ்ட் சிலாங்கூர் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஹசான் அஷாரி இட்ரிஸ் கூறினார்.

கடந்த 2013 ஆம் ஆண்டில் 30,000 பேர் இக்கண்காட்சிக்கு வருகை புரிந்த வேளையில் இம்முறை குறைவான வருகையாளர் எண்ணிக்கையையே இலக்காக நிர்ணயித்திருந்தோம். எனினும், நாங்கள்  எதிர்பாராத வகையில் இரு தினங்களில் 9,800 பேர் இந்த கண்காட்சிக்கு வருகை புரிந்துள்ளனர் என்றார் அவர்.

எஞ்சிய இரு தினங்களில் மேலும் ஐயாயிரம் பேரை  இந்த கண்காட்சிக்கு ஈரக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

சிப்ஸ் 2021 மாநாடு கடந்த 18 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை கோலாலம்பூர் அனைத்துலக வாணிக மையத்தில் நடைபெறுகிறது. ஹைப்ரிட் எனப்படும் பேராளர்களின் நேரடி பங்கேற்பு மற்றும் இயங்கலை வாயிலாக நடைபெறும் இந்த மாநாட்டை சிலாங்கூர் ராஜா மூடா துங்கு அமீர் ஷா தொடக்கி வைத்தார்.


Pengarang :