ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

நகர்ப்புற,கிராமப்புற மக்களுக்கு சம அளவிலான நிதி ஒதுக்கீடு தேவை- சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

ஷா ஆலம், நவ -25  # சிலாங்கூர் 2022 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கு சமமாக விநியோகிக்கப்பட வேண்டும் என்று சுங்கை பாஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு குடிமகனும் மாநிலத்தின் வருவாயை அனுபவிப்பதை உறுதிசெய்ய, மக்கள்தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று  டத்தோ முகமது இம்ரான் தாம்ரின் கூறினார்.

மக்களுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு தொடரப்பட வேண்டும் என் நாங்கள் விரும்புகிறோம். ஆனால் தற்போது மாநில சட்டமன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு கோட்டா முறையில் வழங்கப்படுகிறது.  அந்த முறை மேம்படுத்தப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டைத் தாண்டி தகுதியானவர்களுக்கு மானியம்  வழங்கப்பட வேண்டும் என்று  மீடியா சிலாங்கூர் முகநூலில்  பதிவிட்ட ஒரு பேட்டியில் கூறினார்.

ஒவ்வொரு  தொகுதியிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப அல்லாமல்  வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உதவித்தொகை வழங்கப்படுவதாலேயே இந்தப் பிரச்சனை ஏற்பட்டதாக அவர் கூறினார்.

 கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு பிந்தைய பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிப்பது பட்ஜெட்டின் முக்கிய நோக்கமாக இருந்தாலும் அதற்கான நடைமுறை நிலைமையை சிக்கலாக்குகிறது அவர் குறிப்பிட்டார் 

தகுதியுள்ள மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் எவருக்கும் நியாயமா பங்களிப்பு வழங்கப்பட வேண்டும் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித் தனி கோட்டா முறை ஒதுக்கீடு  இருக்க முடியாது என்று முகமது இம்ரான் கூறினார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள #Selangor2022 பட்ஜெட், தொற்றுநோய்க்குப் பிந்தைய  பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துகிறது.

மேலும் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருவாய் மற்றும் உதவியை அதிகரிப்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

Pengarang :