ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நோய்த் தொற்று காரணமாக தனிநபர் சராசரி வருமானம் 6.5 விழுக்காடு வீழ்ச்சி

ஷா ஆலம், நவ 29- கோவிட்-19 பெருந்தொற்று பெரும்பாலான மலேசியர்களின் சுபிட்சமான வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மலேசிய புள்ளிவிபரத் துறையின் தரவின்படி கடந்த 2019 ஆம் ஆண்டில் 46,450 வெள்ளியாக இருந்த தனிநபர் சராசரி வருமானம் கடந்த கடந்த 2020 இல் 6.5 விழுக்காடு குறைந்து 43,475 வெள்ளியாக ஆனதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்

அதே சமயம், 2019ஆம் ஆண்டு 3,224 வெள்ளியாக இருந்த சராசரி சம்பள விகிதம் 9.0 விழுக்காடு குறைந்து கடந்த 2020 இல் 2,933 வெள்ளியாக குறைந்துள்ளதாக அவர் சொன்னார்.

இந்த சூழ்நிலை காரணமாக மாதம் வெ, 4,850 முதல் வெ.10,959 வரை வருமானம் ஈட்டிய பி50 எனப்படும் நடுத்தர வருமானம் பெறும் தரப்பினர் 4,850 வெள்ளி வருமானம் பெறக்கூடிய பி40 பிரிவுக்கு தள்ளப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார். 

மாநில சட்டமன்றத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் இதனைக் கூறினார்.

பேங்க் நெகாராவின் கணிப்பின்படி நாட்டில் பணவீக்கம் 2.0 முதல் 3.0 வரை இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :