ECONOMYHEALTHNATIONALPBT

கோவிட்-19 நோய்த் தொற்று தொடங்கியது முதல் சிலாங்கூரில் 9,617 பேர் பலி- இந்தியர்கள் 1,285 பேர்

ஷா ஆலம், டிச 1-சிலாங்கூர் மாநிலத்தில் 2020 முதல் இவ்வாண்டு நவம்பர் மாதம் வரை கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு 9,617 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்தாண்டு 66 மரணச் சம்பவங்களும் இவ்வாண்டில் 9,551 சம்பவங்களும் பதிவானதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

மாநில சட்டமன்றத்தில் கோல குபு பாரு உறுப்பினர் லீ கீ ஹியோங்கின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். லீ சார்பாக பந்திங் உறுப்பினர் லாவ் வேங் சான் இக்கேள்வியை எழுப்பினார்.

இவ்வாண்டு நவம்பர் வரை மரணமுற்ற 9,551 பேரில் 7,833 பேர் மலேசியர்களாவர். அவர்களில் மலாய்க்கார்களின் எண்ணிக்கை 4,696 ஆகும். சீனர்களின் எண்ணிக்கை 1,800 ஆகவும் இந்தியர்களின் எண்ணிக்கை 1,285 ஆகவும் பதிவாகியுள்ளது என்று அவர் சொன்னார்.

எஞ்சிய 1,718 மரணச் சம்பவங்கள் அந்நிய நாட்டினர் சம்பந்தப்பட்டவையாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு ஜூன் மாதம் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது முதல் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பதிவான 8,515 மரணச் சம்பவங்களில் 775 அல்லது 9.1 விழுக்காடு இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகச் செலுத்தியவர்கள் சம்பந்தப்பட்டவையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

 


Pengarang :