ECONOMYHEALTHMEDIA STATEMENTPBT

மாநில மன நல சுகாதார செயலி வாயிலாக 4,902 பேர் பயனடைந்தனர்

ஷா ஆலம், டிச 2- சேஹாட் எனப்படும் சிலாங்கூர் மனநல சுகாதாரத் திட்டத்தின் வாயிலாக கடந்த செப்டம்பர் 1 தேதி வரை 4,902 பேர் பதிவு செய்துள்ளனர்.

நவம்பர் மாதம் 21 ஆம் தேதி வரை மன நலம் தொடர்பான சோதனைகளை மேற்கொண்டவர்களும் அதில் அடங்குவர் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

 கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்ட சேஹாட் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட மனநல ஆரோக்கிய கல்வி தொடர்பான 30 காணொளிகளை 18,253 பேர் பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சேஹாட் செயலி வாயிலாக 89 பேருக்கு ஆலோசக சேவை வழங்கப்பட்டது. அங்கீகாரம் பெற்ற ஆலோசகர் வாயிலாக இணையம் வழி அவர்களுக்கு உரிய ஆலோசக சேவை வழங்கப்பட்டது என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் இன்று சேஹாட் செயலியின் பயன்பாடு குறித்து சுபாங் ஜெயா உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸீ எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இந்த செயலியைப் பயன்படுத்துவோரின் வயது 10 முதல் 82 வரை இருந்ததாக கூறிய அவர், அவர்களில் 30 முதல் 50 வயது வரையிலானோரின் எண்ணிக்கை 57.8 விழுக்காடாகும் என்றார்.

 


Pengarang :