Orang ramai mengambil bekalan air dari tangki yang disediakan oleh Pengurusan Air Selangor ketika tinjauan di Lorong Raja Muda Abd Aziz pada 5 September 2020. Foto: BERNAMA
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

நீர் விநியோகம் அனைத்து 463 பகுதிகளிலும் வழக்க நிலைக்குத் திரும்பியது

ஷா ஆலம், டிச 18- செமினி ஆற்றில் ஏற்பட்ட மாசுபாடு காரணமாக நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட நீர் விநியோகத்  தடை நேற்று இரவு 11.00 மணியளவில் முழுமையாகச் சீரடைந்ததாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

உலு லங்காட், கோல லங்காட், புத்ரா ஜெயா மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான அனைத்து 463 பகுதிகளிலும் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.

அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடையின் போது பொறுமை காத்ததோடு தங்களுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கிய பயனீட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அந்நிறுவனம் கூறியது.

இவ்விவகாரம் தொடர்பான மேல் விபரங்களை ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் போஸ்புக், டிவிட்டர், இண்ட்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

செமினி ஆற்றில்  நேற்று முன்தினம் டீசல் கலந்தது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையத்தில் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள 463 பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டது.


Pengarang :