ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

விடாது பெய்யும் அடை மழை- சிலாங்கூரில் 17 துயர் துடைப்பு மையங்கள் திறப்பு

ஷா ஆலம், டிச 18- சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று தொடங்கி பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ள நிலவரத்தை மாநில அரசு அணுக்கமாக கண்காணித்து வருவதோடு தேவை ஏற்படும் பட்சத்தில் மேலும் அதிகமான துயர் துடைப்பு மையங்களைத் திறப்பதற்கும் தயார் நிலையில் உள்ளது.

டீம் சிலாங்கூர் தொண்டூரிய அமைப்பு மற்றும் செர்வ் எனப்படும் சிலாங்கூர் தன்னார்வலர் இயக்கம் ஆகியவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்  தற்காலிக நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்காலிக நிவாரண மையங்களின் பட்டியல்-

  1. அல்-இஸ்லா/ அல்-உபுடியா பள்ளிவாசல்
  2. தெலுக் கோங் தேசிய பள்ளி
  3. சுங்கை பினாங் சமூக மண்டபம்
  4. பூலாவ் இண்டா தேசிய பள்ளி
  5. புலாவ் இண்டா சமயப் பள்ளி
  6. பெரிகி நானாஸ் சமூக மண்டபம்
  7. புக்கிட் நாகா சமூக மண்டபம்
  8. ஜோஹான் செத்தியா தேசிய பள்ளி
  9. சுங்கை பீஜால் தேசிய பள்ளி
  10. பாடாங் ஜாவா சமயப் பள்ளி, கிள்ளான்
  11. ஜாலான் கெபுன் தேசிய பள்ளி
  12. கம்போங் லொம்போங் சமூக மண்டபம்
  13. சுங்கை செர்டாங் சமயப் பள்ளி
  14. 14 தோக் மூடா சமூக மண்டபம்
  15. பெக்கான் காப்பார் சமயப் பள்ளி
  16. கம்போங் டெலேக் சமயப் பள்ளி
  17. கம்போங் டேலேக் சமூக மண்டபம்

Pengarang :