ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

மின்சார ஜெனரேட்டர்கள் மூலம் ஆற்றின் மதகு கதவு மீண்டும் செயல்படத் தொடங்கியது- வெள்ள நீரின் அளவு குறையும்

ஷா ஆலம், டிச. 22 – ஷா ஆலம் செக்சன் 25ல் உள்ள தாமன் ஸ்ரீ மூடாவுக்கு அருகில் உள்ள ஆற்றின் மதகு கதவு மீண்டும் செயல்படத் தொடங்கியது. அதன் வெள்ள நீரின் அளவைக் குறைக்க தெனாகா நேஷனல் பெர்ஹாட்டின் (TNB) மின்சாரம் மற்றும் ஜெனரேட்டர்கள் மூலம்  கேட் செயல்படுவதாக மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“நேற்று ஷா ஆலம் சிட்டி கவுன்சில்  ஊழியர்கள்  மற்றும் கடமையில் இருந்த ராணுவ வீரர்கள் ஜெனரேட்டரை ஏற்றியிருந்த லோரியின் வழியை மறைத்துக் கொண்டு இருந்த நீரில் மூழ்கிய வாகனங்களை நகர்த்துவதற்கு அதிகாலை 3 மணி வரை கடுமையாக உழைத்தனர்.

“கேட் செயல்படுவதால், வெள்ள நீர் மிக விரைவாக குறையும்,” என்று அவர் ட்விட்டரில் கூறினார். நேற்று உள்கட்டமைப்புக்கான மாநில செயற்குழு உறுப்பினர் இசாம் ஹாஷிம் கூறுகையில், தாமன் ஸ்ரீ மூடாவில் வெள்ளம் மெதுவாக குறைந்து வருகிறது, அப்போது மதகு கதவு மூடப்பட்டு இருந்தது.

இன்று அதிகாலை 2 மணி முதல் வடிகாலமைப்பு மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் 16 பம்புகள் மூலம் தாமன் ஸ்ரீ மூடாவில் இருந்து சுமார் 80 சதவீத வெள்ள நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.என்றார். சிலாங்கூரில் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளான பகுதி  இது, பல வீடுகள் இன்னும் தண்ணீரால் நிரம்பியுள்ளன.

6 அடியைத் தாண்டிய வெள்ளம் வீடமைப்பு பகுதிகளில்  ஏற்பட்டது. டிசம்பர் 17 மற்றும் டிசம்பர் 19 க்கு இடையில் பெய்த வழக்கத்திற்கு மாறாக 180 மிமீ ட்டருக்கும்  அதிக மழை பெய்ததையும்   இதனால் மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின  என கூறப்பட்டுள்ளது.


Pengarang :