ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHNATIONAL

வெள்ளத்தில் சிக்கியவர்களில் பாதி பேர் வீடு திரும்பினர்

ஷா ஆலம், டிச 24- மாநிலத்திலுள்ள தற்காலிக வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தவர்களில் பாதி பேர் வீடு திரும்பினர்.

இன்று மாலை 3.00 மணி வரை மாநிலத்திலுள்ள 94 துயர் துடைப்பு மையங்களில் 17,912 பேர் தங்கியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

எஞ்சியுள்ளோர் விரைவாக வீடு திரும்புவதற்கு ஏதுவாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீரை இயந்திரங்கள் மூலம் இறைத்து வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்படுவதாக டிவிட்டர் வழி அவர் தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஷா ஆலம், உலு லங்காட் மற்றும் பெட்டாலிங் ஆகிய பகுதிகளை மந்திரி புசார் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நேற்று முதல் பார்வையிட்டு வருகிறார்.

நேற்று வரை மாநிலம் முழுவதும் உள்ள வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2,376 டன் குப்பைகளை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மண்ட் பெர்ஹாட் நிறுவனம் அகற்றியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உலு லங்காட் பகுதியை மறுநிர்மாணிப்பு செய்வதற்காக மாநில அரசு சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.


Pengarang :