ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 2.28 கோடி பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், டிச 25 -  நாட்டில் நேற்று வரை மொத்தம் 2 கோடியே 28 லட்சத்து 34 ஆயிரத்து 352 பெரியவர்கள்   அல்லது  97.5 விழுக்காட்டினர்  கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் .

மேலும் 2 கோடியே 31 லட்சத்து 34 ஆயிரத்து 179 பேர் அல்லது  98.8 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில்   27 லட்சத்து 44 ஆயிரத்து 559 பேர் அல்லது 87.2 விழுக்காட்டினர் இரண்டு டோஸ்  தடுப்பூசியை முழுமையாக முடித்துள்ள வேளையில்  28 லட்சத்து 39 ஆயிரத்து 606 பேர் அல்லது 90.2  விழுக்காட்டினருக்கு  குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்று மொத்தம் 140,443 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அவர்களில் 134,335  பேர் ஊக்கத் தடுப்பூசிகளையும்  3,901பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளையும் 2,207 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரத்து 268 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட ஊக்கத் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 53 லட்சத்து 63 ஆயிரத்து 641 ஆகும்.

Pengarang :