ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALSELANGOR

இரண்டாம் வெள்ள அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் சிலாங்கூர்

ஷா ஆலம், ஜன 1- சிலாங்கூரில் இரண்டாவது வெள்ள அலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள மாநில அரசு தயாராக உள்ளது.

நேற்றிரவு கூடிய பேரிடர் செயல்குழுவின் கூட்டுக் கூட்டத்தில் இரண்டாவது வெள்ள  அபாயத்திற்கான சாத்தியம் குறித்தும் முழு தயார் நிலையில் இருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

கடந்த கால அனுபவத்திலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளோம். எதிர்காலத்திற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்கு அல்லது வெள்ளப் பேரிடரின் பொது நமது சகாக்களை காப்பாற்றுவதற்கு ஏதுவாக  தளவாடங்கள் உள்பட அனைத்து நிலையிலும் தயாராக இருக்க வேண்டியுள்ளது என்றார் அவர்.

இது தவிர இதர வகையான  ஆதரவு குறிப்பாக கல்வி, பள்ளிவாசல், சூராவ், வர்த்தகம், விவசாயம் ஆகியவற்றுக்கு உதவிகள் வழங்குவது குறித்தும் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறிய அவர், எனினும், தற்போது சிலாங்கூர் பங்கிட் உதவித் திட்டத்தின் மீது முழு கவனத்தையும் செலுத்த தாங்கள் முடிவெடுத்துள்ளதாகச் சொன்னார்.

இது வரை சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உதவிகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பி.எஸ்.பி. எனப்படும் இந்த திட்டத்தின் கீழ் உதவித் தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வரும் ஜனவரி இறுதிக்குள் இப்பணி முற்றுப் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :