ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

வெள்ளம் பாதித்த பகுதியிலிருந்து 25,000 டன் குப்பைகளை ஷா ஆலம் மாநகர் மன்றம் அகற்றியது

ஷா ஆலம், டிச 2- அண்மையில் கடுமையான வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளிலிருந்து நேற்று வரை சுமார் 25,464 டன் குப்பைகளை ஷா ஆலம் மாநகர் மன்றம் அப்புறப்படுத்தியுள்ளது.

சராசரி 2,630 டன் குப்பைகள் வரை ஒவ்வொரு நாளும் அகற்றப்படுவதாக மாநகர் மன்றம் அறிக்கை ஒன்றில் கூறியது.

ஷா ஆலம் மாநகர் மன்றத்திற்குட்பட்ட 21 பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றில 10 பகுதிகள் இதுவரை துப்பரவு செய்யப்பட்டுள்ளன.

மாநகர் மன்றத்தின் 93 பணியாளர்கள், கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மேண்ட் நிறுவனத்தின் 307 பணியாளர்கள் மற்றும் 268 தன்னார்வலர்கள் சேர்த்து மொத்தம் 668 பேர்  இந்த துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் 35 லோரிகள் மற்றும் 94 மண்வாரி இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து குப்பைகளை அகற்ற மாநில அரசு சுமார் 60 லட்சம் வெள்ளியை செலவிட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 31 ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :