ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

நான்கு மாநிலங்களில் கடல் பெருக்கு- விழிப்புடன் இருக்க பொது மக்களுக்கு அறிவுறுத்து

ஷா ஆலம், டிச 2- இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு பெரிய அளவில் அளவில் கடல் பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுதால் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக மேற்கு கரை மாநிலங்களில் வசிப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கெடா மாநிலத்தின் கோல மூடா, பேராக்கின் பாகான் டத்தோ,  சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளான், கோல லங்காட், சபாக் பெர்ணம் மற்றும் கோல  சிலாங்கூர்,  ஜோகூர் மாநிலத்தின் பத்து பகாட், பொந்தியான் மாவட்டங்கள் இந்த கடல் பெருக்கினால் பாதிக்கப்படும் என்று வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை கூறியது.

கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்டதை விட இம்முறை ஏற்படும் கடல் பெருக்கு குறைவான தாக்கத்தை கொண்டதாக இருக்கும் என கணிக்கப்பட்ட போதிலும் பலத்த காற்று மற்றும் பேரலை ஒருங்கே ஏற்படும் பட்சத்தில் கடல் நீர் பெருக்கெடுத்து கரைகளில்  நுழைந்து திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக அத்துறை தெரிவித்தது.

பொழுது போக்கு நடவடிக்கைகளுக்காக கடற்கரைகளுக்கு செல்வோர் மிகுந்த எச்ரிக்கை போக்கை கடைபிடிக்குமாறு அத்துறை கேட்டுக் கொண்டது.

 


Pengarang :