ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஷா ஆலம் வட்டாரத்தில் 28,506 டன் குப்பைகள் அகற்றப்பட்டன

ஷா ஆலம், ஜன 3– வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து கடந்த மாதம் இறுதியிலிருந்து நேற்று வரை 28,506 டன் குப்பைகளை ஷா ஆலம் மாநகர் மன்றம் அகற்றியுள்ளது.

வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட 21 இடங்களில் 12 இடங்கள் முழுமையாக துப்புரவு செய்யப்பட்டுள்ளதை மாநகர் மன்றம் வெளியிட்ட விளக்கப்படம் காட்டியது.

நேற்று அகற்றப்பட்ட குப்பைகளின் அளவு 3,042 டன் என்றும் அந்த விளக்கபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த துப்புரவுப் பணியில் மாநகர் மன்றத்தின் 250 பணியாளர்கள், 65 கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட் ஊழியர்கள் மற்றும் 45 தன்னார்வலர்களோடு 207 லோரிகளும் 60 மண்வாரி இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.

தாமான் ஸ்ரீ மூடா வட்டாரத்தில் மட்டும் தினசரி 2,490 டன் குப்பைகள் வீதம் மொத்தம் 11,919 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இப்பகுதியில் 135 லோரிகள், 45 மண்வாரி இயந்திரங்களோடு 43 மாநகர் மன்றப் பணியாளர்களும் 45 கும்பலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனப் பணியாளர்களும் ஈடுபட்டனர்.

கடந்த வாரம் வியாழக்கிழமை வரை 65 முதல் 85 விழுக்காட்டு குப்பைகள் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.


Pengarang :