ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத் தடுப்பு பரிந்துரைகள் பல்வேறுதரப்பினரிடமிருந்து திரட்டப்படும்- மந்திரி புசார்

ஷா ஆலம், ஜன 8- வெள்ளத்தை தடுப்பதற்கான பல்வேறு குறுகிய கால மற்றும் நீண்டகால திட்டங்கள் குறித்து பரிந்துரைகள் பல்வேறு தரப்பினரிமிருந்து திரட்டப்படும்.

அப்பரிந்துரைகள் யாவும் அடுத்த மாதம் பரிசீலிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாக தாமான் ஸ்ரீ மூடாவில் வெள்ளத் தடுப்பு தொடர்பான பரிந்துரைகளை சேகரிக்கும் பணியில் அடிப்படை வசதிகள் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.

ஒரு சிலர் விவேக சுரங்கப் பாதை அமைக்கும் திட்டத்தையும் ஒரு சிலர் ஆறுகளுக்காக பட்ஜெட்டில் சிறப்பு ஒதுக்கிட்டையும் பரிந்துரைத்துள்ளனர். இவையாவும் விரைவில் பரிசீலிக்கப்பட்டு அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.

பின்னர் இவ்விவகாரம் குறித்து மத்திய அரசுடன் விவாதிக்கப்படும் என்று இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடாவில் வெள்ளத்திற்கு பிந்தைய துப்புரவுப் பணிகளை பார்வையிட்டப் பின்னர் அவர் தெரிவித்தார்.

வெள்ளத் தடுப்பு பரிந்துரைகளை வழங்கிய தரப்புகளில் வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை, பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் மற்றும் சில தனியார் துறைகளும் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :