ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோயிலிருந்து நேற்று 3,161 பேர் குணமடைந்தனர்

கோவிட்-19 நோயிலிருந்து நேற்று 3,161 பேர் குணமடைந்தனர்

கோலாலம்பூர், ஜன 9 – நேற்று மதியம் வரை 3,161 பேர் கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.இதனுடன் சேர்த்து நோய்த் தொற்றிருந்து   குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 11 ஆயிரத்து 900 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர்  டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

நேற்று 3,251 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் நோய்த் தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 83 ஆயிரத்து 331 ஆக உயர்வு கண்டுள்ளதாக அவர் சொன்னார்.

நேற்றைய சம்பவங்களில் 58  அல்லது 1.8 சதவீதம் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தையும் எஞ்சிய 3,193 சம்பவங்கள் அல்லது 98.2 விழுக்காடு ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தையும் சேர்ந்தவை என அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்நோயினால் பாதிக்கப்பட்ட 243 பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலையில்  113 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்று அவர்  கூறினார்.

இன்றைய தேசிய தொற்று விகிதம் (ஆர்.டி.) 0.96 எனக் கூறிய அவர், லாபுவான் அதிகபட்சமாக 1.15  விகிதத்தைப்  பதிவு செய்ததாக டாக்டர் நோர் ஹிஷாம் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நேற்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் ஒரு புதிய கோவிட் -19 தொற்று கண்டறியப்பட்டது. இதனுடன் சேர்த்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களிடையே நோய் கண்டவர்கள்  எண்ணிக்கை 466 ஆக உயர்ந்துள்ளது.

Pengarang :