ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்கள் எண்ணிக்கை 90 லட்சத்தை நெருங்குகிறது

கோலாலம்பூர், ஜன 14- நாட்டில் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை நெருங்குவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

பொது மக்கள் ஊக்கத் தடுப்பூசி பெறுவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப் படுத்தியுள்ளதால் இந்த எண்ணிக்கை அடுத்த வாரத்தில்  ஒரு கோடியை எட்டும் என எதிர்பார்க்கப் படுவதாக அவர் சொன்னார்.

ஒமிக்ரோன் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகள் அமலாக்கம் போன்ற காரணங்களால் மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில சரவா மாநிலத்தை உதாரணம் காட்டிய கைரி, கடந்த அக்டோபர் மாதம் ஊக்கத் தடுப்பூசித் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்னர் அம்மாநிலத்தில் தினசரி நோய்த் தொற்று எண்ணிக்கை 3,000 ஆக இருந்ததாகச் சொன்னார்.

எனினும், செப்டம்பர் மாதத்திற்கு பிறகு இந்த எண்ணிக்கை 90 விழுக்காடு குறைந்து உள்ளதை   கடந்த இரு   வார  நோய்த்தொற்று  பதிவுகள்   காட்டுகின்றன என்றார் அவர்.


Pengarang :