ECONOMYMEDIA STATEMENTNATIONAL

டிங்கில் பாலம் நாளை மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்படும்

ஷா ஆலம், ஜனவரி 16: டிங்கிலில் உள்ள பாலம் நாளை மதியம் 12 மணி முதல் பந்திங்- செமிஞ்சே வழித்தடத்தில் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் மீண்டும் திறக்கப்படும் என்று சிப்பாங் பொதுப்பணித் துறை (ஜேகேஆர்) தெரிவித்துள்ளது.

பழுதுபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டபோது, ​​சாலைப் பயனாளிகள் வழங்கிய  ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிப்பதாக முகநூல் மூலம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி, டிங்கில் நகரில் இருந்து ஜெண்டராம் வரையிலான 54 மீட்டர் நீளமுள்ள பாலத்தின் ஒரு பகுதி மண் அரிப்பு காரணமாக இடிந்து விழுந்ததால் அனைத்து வாகனங்களுக்கும் மூடப் பட்டது.

முன்னதாக, மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி, ஜனவரி மாத இறுதிக்குள் பாலம் கட்டி முடிக்கப்பட்டு பொது மக்களுக்குத் திறக்கப்படும் என்றார்.

பாலத்தை  பழுதுபார்க்கும் தூரத்தைப் பொறுத்து அதன் செலவு  ரிம500,000 முதல் 2.8 மில்லியன் ரிங்கிட் வரை  அதன்  செலவு அமையும் என மதிப்பிடப் படுவதாக  கூறியிருந்தார்.


Pengarang :