ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூரில் அந்நிய முதலீடு அடுத்தாண்டில் சிறப்பாக இருக்கும்- டத்தோ தெங் நம்பிக்கை

பெட்டாலிங் ஜெயா, ஜன 28- சிலாங்கூர் மாநிலத்தில் அந்நிய நேரடி முதலீடு அடுத்தாண்டில் சிறப்பானதாக இருக்கும் என்று முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

அந்நிய நாடுகளின் எல்லை தொடர்ந்து மூடப்பட்டிருப்பது இவ்வாண்டில் வெளிநாடுகளுக்கான முதலீட்டுப் பயணங்களில் சிறிது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் சொன்னார். 

இணையம் வாயிலாக முதலீட்டு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்ட போதிலும் சில முதலீட்டு நடவடிக்கைகளில் முதலீட்டாளர்களின் நேரடி பங்கேற்பு அவசியம் தேவைப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். 

எல்லைகள் மூடப்பட்டிருப்பதால் ஏற்படும் பாதிப்புகளை நம்மால் தவிர்க்க இயலவில்லை. இருப்பினும் அடுத்தாண்டு சிறப்பானதாக இருக்கும் என நம்புகிறோம் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வர்த்தக மற்றும் பொது போக்குவரத்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறியும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இருந்த போதிலும் ஏற்கனவே இலக்கு நிர்ணயித்தபடி 800 கோடி வெள்ளி முதலீட்டை இவ்வாண்டில் ஈர்க்க இயலும் என்றும் அவர் சொன்னார்.

கடந்த 2021ஆம் ஆண்டில் சிலாங்கூர் 590 கோடி வெள்ளி முதலீட்டைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :