KUANTAN, 2 Okt — Ketua Polis Negara Tan Sri Abdul Hamid Bador (tengah) melihat lampu yang menggunakan tenaga solar ketika melawat pameran selepas majlis Sambutan Hari Inovasi Polis DiRaja Malaysia (PDRM) 2020 di sini, hari ini. Turut hadir Ketua Polis Pahang Datuk Seri Abdul Jalil Hassan (dua kanan). –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் தலைநகரில் கடந்தாண்டு 1,558 பேர் கைது

கோலாலம்பூர், ஜன 30- கடந்த ஆண்டு  தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் கவனக்குறைவாக மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக 1,558 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 1,157 பேரும் கவனக் குறைவான முறையில் ம வாகனம் ஓட்டியதற்காக 287 பேரும் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை  துணைத் தலைவர் சூப்ரிண்ட். சுல்காப்லி சேக் லா தெரிவித்தார்.

போலியான எண் பட்டைகளைப் பயன்படுத்தியதற்காகவும் சிலர் கைது செய்யப்பட்டதாக நேற்று இரவு இங்கு மேற்கொள்ளப்பட்ட சாலைத் தடுப்பு சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர்  தெரிவித்தார். 

கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக 235  பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நேற்று இரவு மூன்று இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில், விதிகளை மீறிய  குற்றத்திற்காக 189 வாகனமோட்டிகளுக்கு சம்மன்கள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

மதுபோதையில் வாகனம் மூவர் கைது செய்யப்பட்டதோடு  ஏழு மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர்.

Pengarang :