ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

5 முதல் 11 வயது சிறார்களுக்கான தடுப்பூசி இயக்கம் இன்று ஆரம்பம்

கோலாலம்பூர், பிப் 3– ஐந்து முதல் பதினோரு வயது வரையிலான சிறார்களுக்கான கோவிட்-19 தடுப்பூசி இயக்கம் (பிக்கிட்ஸ்) தொடக்கக் கட்டமாக கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று தொடங்குகிறது.

 இந்த சிறார் தடுப்பூசி இயக்கம் இன்று தொடங்கும் நிலையில் நேற்று முன்தினம் வரை இத்திட்டத்தில் பங்கேற்பதற்கு சிறார்களிடமிருந்து 511, பதிவுகள் கிடைத்துள்ளன.

இந்த பிக்கிட்ஸ் திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெறுவதற்கு கோலாலம்பூரில் 47,500 சிறார்களும் புத்ரா ஜெயாவில் 3,400 சிறார்களும் சிலாங்கூரில் 131,500 சிறார்களும் பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பெர்மானா செய்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் பல பெற்றோர்கள் சிறார்களுக்கான இந்த தடுப்பூசி இயக்கத்திற்கு வரவேற்பு தெரிவித்தனர்.

தங்களை பிள்ளைகளை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கவும் கோவிட்-19 நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு உதவி புரியவும் இந்த சிறார் தடுப்பூசித் திட்டத்திற்கு பதிவு செய்ததாக அவர்கள் கூறினர்.

மைசெஜாத்ரா செயலி வாயிலாக மிகவும் எளிதான முறையில் தடுப்பூசிகு பதிவு செய்யவும் வருகைக்கான முன்பதிவு பெறவும் செய்யப்பட்ட ஏற்பாட்டை தாங்கள் வரவேற்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


Pengarang :