ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 எண்ணிக்கை அதிகரிக்கும் ; ஆனால் கலக்கம் வேண்டாம்- அமைச்சர் கைரி அறிவுறுத்து 

ஷா ஆலம், பிப் 3– ஒமிக்ரோன் வகை தொற்று பரவல் காரணமாக நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று தினசரி எண்ணிக்கை குறுகிய காலத்தில் அபரிமித உயர்வு காணும் என சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் எச்சரித்துள்ளார்.

அந்த புதிய வகை திரிபுவின் பரவல் விகிதம் அதிகமாக உள்ளதால் இதர நாடுகளிலும் இதே நிலை நீடிப்பதாக கூறிய அவர், இதனைக் கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சு நிலைமையை அணுக்கமாக கண்காணித்து வருவதாக சொன்னார்.

இருந்த போதிலும் நாம் கலக்கமடையக்கூடாது. கோவிட்-19 நோய்த் தொற்றுடன் வாழ வேண்டும் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை மலேசிய சமூகம் பெற்றுள்ளதோடு உலகிலேயே அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நாடாகவும் இது விளங்குகிறது என்று அவர் கூறினார்.

நோய்த் தொற்று எளிதில் பீடிக்கும் சாத்தியம் உள்ளவர்கள் மற்றும் கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கிருமி எதிர்ப்பு பெக்ஸ்லோவிட் மருந்தை பெறுவதற்கான முயற்சியில் சுகாதார அமைச்சு ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நேர்மறையான சூழலை நோய்த் தொற்று மற்றும் கோவிட்-19 நோயாளிகள் மேலாண்மை அமைப்பு குறுகிய காலத்திலேயே பதிவு செய்துள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

இந்த பெக்ஸ்லோவிட் மருந்தின் மூலம் கோவிட்-19 நோயாளிகளால் பொது சுகாதாரத் துறைக்கு ஏற்படக்கூடிய சுமையை குறைக்க முடிந்துள்ளது என்றார் அவர்.


Pengarang :