ECONOMYMEDIA STATEMENTSELANGOR

பிள்ளைகளுக்குத் தடுப்பூசி பெறச் செல்லும் பெற்றோர்களுக்கு விடுப்பு- மீடியா சிலாங்கூர் வழங்குகிறது

ஷா ஆலம், பிப் 7– கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதற்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்களுக்கு மீடியா சிலாங்கூர் சென்.பெர்ஹாட் நிறுவனம் பதிவு இல்லா விடுப்பை வழங்குகிறது.

இம்மாதம் தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வரும் 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்கான பிக்கிட்ஸ் தடுப்பூசித் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த சிறப்பு விடுமுறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர விடுப்பிலிருந்து கழித்துக் கொள்ளப்படாது.

மீடியா சிலாங்கூர் ஊழியர்கள்தங்கள் பிள்ளைகளு க்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கவும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி பெற்றிருப்பதை உறுதி செய்யவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நடவடிக்கையின் மூலம் நாட்டில் நோய்ப் பரவல் சாத்தியத்தையும் கோவிட்-19 எண்ணிக்கை உயர்வையும் கட்டுப்படுத்த முடியும் என்று அந்நிறுவனம் வெளியிட்ட குறிப்பு கூறியது.

பிக்கிட்ஸ் திட்டத்தின் கீழ் இம்மாதம் 1 ஆம் தேதி வரை பைசர் தடுப்பூசியைப் பெறுவதற்கு 517,107 சிறார்கள் பதிவு செய்துள்ளனர். நாட்டிலுள்ள மொத்தம் 36 லட்சம் சிறார்களில் இது 15 விழுக்காடாகும்.

தடுப்பூசி மற்றும் ஊக்கத் தடுப்பூசி பெறும் ஊழியர்களுக்கு மீடியா சிலாங்கூர் நிறுவனம் கடந்தாண்டு தொடங்கி விடுமுறை வழங்கி வருகிறது. இது தவிர கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அல்லது நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த ஊழியர்கள் சோதனை மேற்கொள்வதற்கு உண்டாகும் செலவினையும் அந்நிறுவனம் ஏற்றுக் கொள்கிறது.


Pengarang :